science-deep-dives

VV-017: Stage 4 Plant Health Pyramid: Unshakable Ultimate Immunity!

Ravishankar Karuppiah
June 12, 2026

Understanding Stage 4 Plant Health Pyramid - Plant Secondary Metabolites

VV-017: Stage 4 Plant Health Pyramid: Unshakable Ultimate Immunity!

குறிப்பு - இதன் தமிழாக்கம் இந்த பக்கத்தில் சற்று கீழே உள்ளது.

Join our WhatsApp group here -> https://chat.whatsapp.com/DtRfcPrnZykIfmavZU6kj0

VV-017: Stage 4 Health: Unshakable Ultimate Immunity!

We have reached the pinnacle of John Kempf's Plant Health Pyramid — "Stage 4: Elevated Plant Secondary Metabolites."

This is the ultimate level of agricultural science! If your crop climbs this fourth step of the pyramid... it will not just defend itself from pests; it will begin to produce dramatic "bio-chemical" weapons within itself to annihilate enemies. A crop that reaches this stage cannot be shaken by any beetle, stem borer, root worm, viral diseases, or even severe drought!


What is Stage 4 Health?

To understand this, we need to know the difference between Primary and Secondary metabolites.

  • Primary metabolites: The basic substances a crop needs to survive (sugars, proteins, fats). These are stages 1, 2, and 3 we have seen.
  • Secondary metabolites (PSMs): Only when a crop is in an extraordinary state of peak health will it produce these unique bio-chemical compounds.

To put it simply, you can call this the crop's "Commando Force." It contains potent metabolites like natural Alkaloids, Terpenes, and Phenols. These same secondary metabolites give herbs their healing power and give ginger, garlic, and neem their pungent bitterness and spiciness!

When your soil's minerals are 100% balanced and billions of microorganisms live in the soil... your mango, banana, or coconut trees will begin producing and saturating their entire bodies with these commando chemicals.

The Protection This Gives the Crop: Nuclear Warfare!

If a pest or disease tries to attack a crop that has reached this fourth stage, the crop will activate the chemical bombs stored within it:

  1. Complete Pest Resistance: If a beetle or borer bites a branch or fruit of this fourth-stage crop... it will ingest the alkaloid toxins the crop has produced. This will immediately paralyze the pest's nervous system. This is a self-produced "pesticide" by the crop!
  2. Virus and Bacteria Stoppage: Deadly viral diseases cannot enter and multiply inside this fourth-stage crop. Because the phenols inside the crop will destroy those viral germs upon contact.
  3. Extraordinary Drought Resistance: These fourth-stage crops withstand extraordinary drought. Even if the sun blazes past 42°C, the leaves will not wilt, flowers will not drop, and they will stand majestically. Because the chemistry inside protects the cells from wilting.

The Secret Key Lies in the Soil!

Why can't even 1% of farmers in the world see this Stage 4 health in their fields? Because a crop can only activate these fourth-stage DNA codes if the microorganisms in the soil give a specific signal (Microbial Signal).

Beneficial microorganisms in living soil constantly send certain chemical messages to the crop's roots. As soon as the crop receives that signal, it gains extraordinary vigor and produces these bio-weapons. If you have used chemicals and destroyed the life in your soil, the crop will never receive that message; this fourth-stage shield will always remain locked!

This is the reality of the vegetables, fruits, and greens grown in the chemical agriculture you buy today. The complete nutrition you expect is not there. This is wrong... Even if a farmer wants to switch to "Natural Farming" as an alternative, they face a situation where "the principal itself is lost." Both of these farming systems are unlikely to last long. The solution to all this is "Regenerative Agriculture," which New Viva Bio Nutrients plans to disseminate. This includes the science of Chemistry. It also includes the science of Biology. This is the future of agriculture.

The Final Lesson of This Series:

We started from desert soil, and today we have reached the peak of the Plant Health Pyramid. What is the greatest truth we have learned from this?

If pests and diseases come to your crops... it doesn't mean you lack pesticide; it means your soil lacks nutritional and biological balance!

Stop seeing your farmland as a chemical factory. When you balance the soil according to the Albrecht-Kinsey method and provide quality nutrition... nature does the work for you. You will save lakhs of rupees on pesticides, and the yield will reach the peak of its genetic potential!

All the science to transform your land into this fourth-stage iron fortress is ready at "New Viva Bio Nutrients." Stop fighting symptoms. Let us restore the soil, reach the pyramid's peak, and together create unshakable agriculture!

We will talk again.


Tamil Version (தமிழ் வடிவம)

VV-017: நான்காம் கட்ட ஆரோக்கியம் (Stage 4): அசைக்க முடியாத உச்சகட்ட நோய் எதிர்ப்பு சக்தி!

ஜான் கெம்பின் தாவர ஆரோக்கிய பிரமிடோட உச்சிப் பகுதிக்கு நாம வந்துட்டோம் — "நான்காம் கட்டம்: தாவர இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றம்" (Elevated Plant Secondary Metabolites).

இது விவசாய அறிவியலோட உச்சகட்ட நிலை! உங்க பயிர் இந்த பிரமிடோட நாலாவது படிக்கட்டுக்கு ஏறிடுச்சுனா... அது சும்மா பூச்சிங்ககிட்ட இருந்து தன்னை தற்காத்துக்காது; தனக்குள்ளேயே அதிரடியான "பயோ-கெமிக்கல்" (உயிர்-ரசாயன) ஆயுதங்களைத் தயாரிச்சு எதிரிகளைத் துவம்சம் செய்ய ஆரம்பிக்கும். இந்த நிலையை அடைஞ்ச பயிரை எந்த ஒரு வண்டு, தண்டு துளைப்பான், வேர் புழு, வைரஸ் நோய்கள் அல்லது கடுமையான வறட்சியால் கூட அசைக்க முடியாது!


நான்காம் கட்ட ஆரோக்கியம் (Stage 4) என்றால் என்ன?

இதப் புரிஞ்சுக்க முதன்மை சத்துக்களுக்கும் (Primary), இரண்டாம் நிலை சத்துக்களுக்கும் (Secondary) இருக்குற வித்தியாசத்தை நாம தெரிஞ்சுக்கணும்.

  • முதன்மை சத்துக்கள்: ஒரு பயிர் உயிர் வாழ்றதுக்குத் தேவையான அடிப்படை விஷயங்கள் (சர்க்கரை, புரோட்டீன், கொழுப்பு). இதுதான் நாம பார்த்த 1, 2, 3 கட்டங்கள்.
  • இரண்டாம் நிலை சத்துக்கள் (PSMs): ஒரு பயிர் அசாத்திய ஆரோக்கியத்தோட உச்சகட்ட நிலையில இருக்கும்போது மட்டும் தான் இந்த விசித்திரமான உயிர்-ரசாயன சேர்மங்களை அது தயாரிக்கும்.

சிம்பிளா சொல்லணும்னா, இத பயிரோட "கமாண்டோ படை"னு சொல்லலாம். இதுல இயற்கை ஆல்கலாய்டுகள் (Alkaloids), டெர்பீன்கள் (Terpenes), மற்றும் ஃபினால்கள் (Phenols) போன்ற வீரியமிக்க சத்துக்கள் இருக்கும். மூலிகைகளுக்கு நோய் குணப்படுத்துற சக்தியையும், இஞ்சி, பூண்டு, வேப்பிலைக்கு அந்த மொரட்டுத்தனமான கசப்பு மற்றும் காரத்தன்மையைக் குடுக்குறதும் இதே இரண்டாம் நிலை சத்துக்கள்தான்!

உங்க நிலத்தோட மினரல்கள் நூறு சதவீதம் பேலன்ஸ் ஆகி, மண்ணுல கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் வாழும்போது... உங்க மாமரம், வாழை அல்லது தென்னை பயிர்கள் தங்களோட உடம்பு முழுக்க இந்த கமாண்டோ வேதிப்பொருட்களைத் தயாரிச்சு நிரப்ப ஆரம்பிக்கும்.

இதனால பயிருக்குக் கிடைக்கும் பாதுகாப்பு: அணு ஆயுதப் போர்!

இந்த நான்காம் கட்டத்தை அடைஞ்ச பயிரை ஒரு பூச்சியோ இல்ல நோயோ தீண்ட நினைச்சா, பயிர் தனக்குள்ள வச்சிருக்கற கெமிக்கல் வெடிகுண்டுகளை ஆன் செய்திடும்:

  1. முழுமையான பூச்சி எதிர்ப்பு: ஒரு வண்டோ அல்லது தண்டு துளைப்பானோ (Borer) இந்த நாலாவது கட்ட கிளையையோ அல்லது பழத்தையோ கடிச்சா... அது பயிர் தயாரிச்சு வச்சிருக்கற ஆல்கலாய்டு நச்சுக்களை முழுங்க நேரிடும். அது அந்தப் பூச்சியோட நரம்பு மண்டலத்தை உடனே முடக்கிடும். பயிர் தனக்குத் தானே தயாரிச்ச "பூச்சிக்கொல்லி மருந்து" இது!
  2. வைரஸ் மற்றும் பாக்டீரியா முடக்கம்: கொடிய வைரஸ் நோய்களால இந்த நான்காம் கட்ட பயிருக்குள்ள நுழைஞ்சு தங்களைப் பெருக்கிக்கொள்ள முடியாது. ஏன்னா, பயிருக்குள் இருக்கும் ஃபினால்கள் அந்த வைரஸ் கிருமிகளைத் தொட்ட உடனே அழிச்சிடும்.
  3. அசாத்திய வறட்சி எதிர்ப்பு: இந்த நாலாவது கட்ட பயிர்கள் அசாத்திய வறட்சியைத் தாங்கும். வெயில் 42°C-ஐத் தாண்டி கொளுத்தினாலும், இலைங்க வாடாம, பூக்கள் கொட்டாம கம்பீரமா நிக்கும். ஏன்னா, இதோட உடம்புல இருக்குற கெமிஸ்ட்ரி செல்களை வாடவிடாமல் பாதுகாக்கும்.

மண்ணில் இருக்கும் ரகசிய சாவி!

ஏன் உலகத்துல 1% விவசாயிகள் கூட இந்த நாலாவது கட்ட ஆரோக்கியத்தை தங்களோட வயல்ல பார்க்க முடியறது இல்லை? ஏன்னா, மண்ணுல இருக்குற நுண்ணுயிர்கள் ஒரு குறிப்பிட்ட சிக்னலை (Microbial Signal) குடுத்தா மட்டும்தான் பயிரால இந்த நாலாவது கட்ட டி.என்.ஏ (DNA) குறியீடுகளை ஆன் செய்ய முடியும்.

உயிருள்ள மண்ணுல இருக்குற நல்ல நுண்ணுயிர்கள், பயிரோட வேர்களுக்கு எப்பவும் சில ரகசிய கெமிக்கல் மெசேஜ்களை அனுப்பிட்டே இருக்கும். அந்த சிக்னல் கிடைச்ச உடனே பயிர் அசாத்திய வீரியம் பெற்று இந்த பயோ-ஆயுதங்களைத் தயாரிக்கும். நீங்க ரசாயனம் போட்டு மண்ணோட உயிரை அழிச்சு வச்சிருந்தா, பயிருக்கு அந்த மெசேஜ் கிடைக்கவே கிடைக்காது; இந்த நாலாவது கேடயம் எப்பவும் பூட்டியே தான் இருக்கும்!

நீங்க இன்னைக்கு வாங்குற ரசாயன விவசாயத்துல வளர்ந்த காய்கறி, பழங்கள் மற்றும் கீரைகள்ள இருக்கிற உண்மை இதுதான். நீங்க எதிர்பார்க்குற முழுமையான ஊட்டச்சத்து அங்க இல்ல. இது தப்பு.. இதுக்கு மாற்று "இயற்கை விவசாயம்" தான் அப்படின்னு விவசாயி போக நினைச்சாலும், அங்க அவங்களுக்கு "முதலுக்கே மோசம்" அப்படிங்கர நிலைமை தான் இருக்கு. இந்த ரெண்டு விவசாய முறையும் ரொம்ப நாள் நிலைக்க வாய்ப்பில்லை. இது எல்லாத்துக்கும் தீர்வு - நியூ விவா பயோ நூட்ரீயண்ட்ஸ் பரவலாக்க நினைக்கிற "ஊட்டச்சத்து விவசாயம் (Regenerative Agriculture)" தான். இதுல வேதியியல் (Chemistry) அறிவியலும் இருக்கு. உயிரியல் (Biology) அறிவியலும் இரூக்கு. இது தான் விவசாயத்தின் எதிர்காலம்.

இந்தத் தொடரின் இறுதிப் பாடம்:

நாம பாலைவன மண்ணுல ஆரம்பிச்சு, இன்னைக்கு தாவர ஆரோக்கிய பிரமிடோட உச்சிக்கு வந்துட்டோம். இதுல இருந்து நாம கத்துக்கிட்ட மிகப்பெரிய உண்மை என்ன?

பயிர்கள்ல பூச்சியும் நோயும் வருதுன்னா... அதுக்குக் காரணம் உங்ககிட்ட பூச்சி மருந்து இல்லைன்னு அர்த்தம் இல்ல; உங்க மண்ணுல ஊட்டச்சத்தும் உயிரியல் சமநிலையும் (Nutritional & Biological Balance) இல்லைன்னுதான் அர்த்தம்!

விவசாய நிலத்தை ஒரு ரசாயன ஃபேக்டரியா பார்க்குறதை நிறுத்திட்டு, ஆல்பிரெக்ட்-கின்சி முறைப்படி மண்ணை பேலன்ஸ் செஞ்சு, தரமான ஊட்டச்சத்து இடுபொருட்களைக் குடுக்கும்போது... இயற்கை உங்களுக்கான வேலையைத் தானே செய்யுது. லட்சக்கணக்குல பூச்சி மருந்து காசு மிச்சமாகும், மகசூல் மரபணு திறனின் உச்சத்துக்கே போகும்!

உங்க நிலத்தை இந்த நான்காம் கட்ட இரும்புக்கோட்டையா மாத்துறதுக்கான அத்தனை அறிவியலும் "நியூ விவா பயோ நூட்ரீயண்ட்ஸ்-ல்" தயாராக உள்ளது. அறிகுறிகளோடு சண்டை போடுவதை நிறுத்துங்கள். மண்ணைச் சீரமைப்போம், பிரமிடின் உச்சியை அடைவோம், அசைக்க முடியாத விவசாயத்தை ஒன்னா சேர்ந்து உருவாக்குவோம்!

இன்னும் பேசுவோம்.

ரவிசங்கர் கருப்பையா 934 204 9144

Share this article

Help others discover this content

Share on social media:

Article URL:

https://newviva.in/blog/stage4-plant-health-pyramid

More from science-deep-dives